டெல்லி: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் பத்தாவது நாள்களாக தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த போர் நடவடிக்கை காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி ‛ஆபரேஷன் கங்கா' என்னும் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்டுவருகிறது.
அதன்படி நேற்று(மார்ச்.4) ருமேனியாவின் சுசேவா விமான நிலையத்தில் 229 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று(மார்ச்.5) டெல்லி வந்ததடைந்தது. இதேபோல உக்ரைனின் நான்கு அண்டை நாடுகளிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர்.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையின் C-17 விமானம் உள்பட 16 விமானங்கள் இயக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் வந்த மாணவர்களை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வரவேற்றார்
இதையும் படிங்க: இந்திய மாணவர்களை வெளியேற்ற 130 பேருந்துகள் ஏற்பாடு - ரஷ்ய ராணுவம்