அகமதாபாத்: குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமத்தில் நேற்று (ஜூலை 25) கள்ளச்சாராயம் அருந்தியதில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, 47 பேர் பாவ்நகர் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தந்துக, பாவ்நகர் மற்றும் பொடாட் ஆகிய மாவட்டங்களின் பல மருத்துவமனைகளில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளச்சாராயம் அருந்தி பாவ்நகர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து 8 பேர் நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஐஐி அசோக் யாதவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம், மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 7 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது, குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஜராத்தில் போலி மதுபானம் அருந்திய 8 பேர் உயிரிழப்பு