கொல்கத்தா: நேற்று(நவ.10) பிற்பகல் டாப்சியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 20 குடிசைகள் எரிந்து, தீக்கிரையானதாக அங்கு பணி செய்த தீயணைப்பு வீரர் தெரிவித்தார்.
3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தகவலறிந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் மூலம் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை, குடியிருப்புப் பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதில் 20 குடிசைகள் எரிந்து தீக்கிரையானது; பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியலை சேகரித்து அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என உயர் தீயணைப்பு அலுவலர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தில், அர்னாப் கோஸ்வாமி மனு நாளை விசாரணை