கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், மருத்துவ விசாவில் வந்த தான்சானியாவை சேர்ந்த இருவர் மீது சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் அவர்களைக் காவலில் எடுத்த பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது, அவர்களுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, இருவரின் வயிற்றிலும் சில வெளிநாட்டுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களது வயிற்றிலிருந்து 2.225 கிலோ எடையுள்ள கோக்கைன் எனும் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 13.35 கோடி ரூபாய்.
இது தொடர்பாக அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மும்பைக்கு வரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக அவற்றை விழுங்கியதாக ஒப்பு கொண்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் வியாழக்கிழமை (ஏப்.29) முறையாக கைது செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.