ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தின் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ரயில்பாதையில் தண்டவாளத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்த இரண்டு யானைகள் மீது அவ்வழியாக வந்த சரக்கு ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த யானைகள் உயிரிழந்தன.
இது தொடர்பாக அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ’யானை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படும்’ என்றார்.
இதையும் படிங்க:போலி மணல் தயாரித்து விற்ற ஐந்து பேர் கைது!