ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ரா பகுதியில் இருந்து வடகிழக்கே 62 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் நேற்றிரவு 11:04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியது. அதைத்தொடர்ந்து, 11:52 மணியளவில் கத்ராவில் இருந்து கிழக்கே 60 கிமீ தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு ஜம்மு காஷ்மீரின் கத்ரா, தோடா, உதம்பூர், கிஷ்த்வார் மாவட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகின் மிக நீளமான எலக்ட்ரிக் பைக்... உ.பி. இளைஞர் அசத்தல்...