ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்திலுள்ள முகாமிலிருந்து இரண்டு எல்லைப் பாதுகாப்பு படையினர் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுந்தர்பானி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் இருவரும் நேற்று மாலை காணமால்போனதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அவர்கள் இருவர் குறித்து தற்போதுவரை எவ்வித தகவலும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுஷாந்த் சிங் மரண வழக்கு: மேலும் இருவர் கைது