ETV Bharat / bharat

குழந்தைகளுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாய்! - குழந்தைகளுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாய்

குவாலியரில் நேற்று (மே.16) இளம்பெண் ஒருவர் தனது குழந்தைகள் முன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாய்!

author img

By

Published : May 17, 2021, 3:15 PM IST

குவாலியர்(மத்தியப் பிரதேசம்): பிஜாலி பகுதியில் வசித்து வருபவர், 28 வயது இளம்பெண். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் இவரது கணவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அப்பெண் தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(மே 16) நள்ளிரவு 2 மணியளவில் அடையாளம் தெரியாத இரு நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து இரு குழந்தைகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, குழந்தைகளுக்கு முன்பே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததையடுத்து இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.