ETV Bharat / bharat

நள்ளிரவில் சிறுமியின் அறைக்குள் புகுந்த இளைஞருக்கு நடந்த விபரீதம்

author img

By

Published : Dec 29, 2021, 9:36 PM IST

கேரளாவில் நள்ளிரவில் சிறுமியின் அறைக்குள் புகுந்த 19 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

19-year-old-stabbed-to-death-by-girlfriend-father

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் லாலன்(51). இவரது 17 வயது மகளை காண, 19 வயது இளைஞர் இன்று நள்ளிரவில் அவரது அறைக்குள் புகுந்தார். மகளின் அறைக்குள் கூச்சல் கேட்டதால், லாலன் கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால், உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்து இளைஞரை கத்தியால் சரமாரியாக தாக்கினார். இதில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். உடனே லாலன் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று, தனது வீட்டிற்குள் திருடன் புகுந்ததாகவும், அவனை கத்தியால் தாக்கியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

அதனடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்த காவலர்கள் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இளைஞர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை தரப்பில், லாலனின் வாக்குமூலம் சந்தேகிக்கும்படி உள்ளது. எனவே உயிரிழந்த இளைஞருக்கும், அவருக்கும் முன் விரோதம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேவைப்பட்டால் பள்ளி, கல்லூரிகளை மூடலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.