ETV Bharat / bharat

கொச்சியில் இந்திய மாலுமி பிணமாக கண்டெடுப்பு! - அலிகார்

கொச்சியில் இந்திய மாலுமி ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Kochi Naval Base
Kochi Naval Base
author img

By

Published : Jul 6, 2021, 10:11 AM IST

கொச்சி : உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியைச் சேர்ந்த 19 வயதான மாலுமி ஒருவர் கொச்சி கப்பல் படைத்தளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) காலை பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பிணமாக கண்டெடுக்கப்பட்ட மாலுமியின் தலையில் குண்டு அடிப்பட்ட காயங்கள் உள்ளன.

இது குறித்து தென்னக கப்பல் கட்டளை அலுவலர் கூறுகையில், “சம்பவம் குறித்து கப்பல் படை தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்ற பேரில் உள்ளூர் காவலர்களும் விசாரணை நடத்திவருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்றார்.

எனினும் உயிரிழந்த மாலுமியின் பெயர் உள்பட மற்ற விவரங்கள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : கடற்படை மாலுமியை கடத்தி உயிருடன் கொளுத்திய கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.