ராஞ்சி: ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் உள்ள கரவுண்டஜோர் கிராமத்தில், பெர்ஜானியா இந்த்வார் மற்றும் இக்னீசியா இந்த்வார் ஆகிய இருபெண்கள் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அக்கிராமப்பெண்கள், மாந்திரீகத்தில் ஈடுபட்ட இருவரையும், ஜூன் 11ஆம் தேதி கொலை செய்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரும் கொலைச்செய்யப்பட்ட மறுநாள், உயிரிழந்த பெண் ஒருவரின் மகள் 19 பெண்கள் மீது வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கும்லா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக. 3) தீர்ப்பு வெளியானது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட 19 பெண்களுக்கும் ஆயுள் தண்டனையும், அனைவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கண்ணில் காரப்பொடி தூவிய பின்னும் திருடனை விரட்டிப் பிடித்த சிங்கப்பெண்