ETV Bharat / bharat

QS Asia Rankings 2023: சென்னை ஐஐடி, அண்ணா பல்கலை. அசத்தல்! - Madras iit

க்யூ எஸ் ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல் முதல் 200 பல்கலைக்கழகங்களில் 19 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

top 200 in QS Asia Universities Ranking 2023  19 Indian universities feature in top 200  Indian Institute of Technology Bombay 40th rank  க்யூ எஸ் தர வரிசை பட்டியல்  இந்தியப் பல்கலைக்கழகங்கள்  பல்கலைக்கழகங்கள்  ஐஐடி
க்யூ எஸ் தர வரிசை பட்டியல்
author img

By

Published : Nov 9, 2022, 9:36 AM IST

Updated : Nov 9, 2022, 12:33 PM IST

டெல்லி: க்யூ எஸ் உலக பல்கலைக்கழக தர வரிசையானது, பல்கலைக் கழகத்தின் பல முக்கிய பணிகள், கல்வியாண்டு தேர்ச்சி விகிதம் நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை, அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற செயல்திறன்களை கொண்டு வெளியிடப்படும்.

அந்த வகையில் க்யூ எஸ் ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியல், நேற்று (நவம்பர் 8) வெளியிடப்பட்டது. இதில், முதல் 200 பல்கலைக்கழகங்களில் 19 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்கள், முதல் 200 இடங்களுக்குள் இடம்பெற்றது இதுவே முதல் ஆகும்.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த ஆண்டு, முதல் 200 க்யூ எஸ் ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் இடம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில், ஐஐடி பாம்பே 40வது இடத்தையும், ஐஐடி டெல்லி 46வது இடத்தையும், ஐஐஎஸ்சி பெங்களூர் 52, ஐஐடி மெட்ராஸ் 53ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், ஐஐடி காரக்பூர் 61, ஐஐடி கான்பூர் 66, டெல்லி பல்கலைக்கழகம் 85, ஐஐடி ரோர்கி 114, ஜேஎன்யு 119, ஐஐடி குவஹாத்தி 124, விஐடி வேலூர் 173, கல்கத்தா பல்கலைக்கழகம் 181, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 182, அண்ணா பல்கலைக்கழகம் 185, சண்டிகர் பல்கலைக்கழகம் 185, ஐஐடி இந்தூர் 185, BITS பிலானி 188, ஜாமியா மில்லியா இஸ்லாமியா 188, மற்றும் அமிட்டி பல்கலைக்கழகம் நொய்டா 200 போன்ற இடங்களையும் பிடித்துள்ளன.

சண்டிகர் பல்கலைக்கழகம் கருவான் ஆசியாவில் 185ஆவது இடத்தையும், இந்தியாவில் 14ஆவது இடத்தையும், இந்தியாவின் தனியார் பல்கலைக்கழகங்களில் 2ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. க்யூ எஸ் ஆசியா தரவரிசை 2022 உடன் ஒப்பிடுகையில், அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களும், அவர்களின் கல்விப் புகழ் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி வலையமைப்பில் மேம்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சவால்களை சிறப்பாக எதிர்கொண்ட தமிழ்நாடு காவல்துறை - டிஜிபி பாராட்டு

Last Updated : Nov 9, 2022, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.