ETV Bharat / bharat

இந்தியர்கள் வேலைக்காக புலம்பெயரும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதலிடம்! - சவுதி அரேபியா

இந்தியர்கள் வேலைக்காக புலம்பெயரும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளது.

Indians
Indians
author img

By

Published : Aug 4, 2022, 7:55 PM IST

டெல்லி: பணிபுரிவதற்காக வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் இந்தியர்கள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.

அதில், "2022ஆம் ஆண்டில் ஜூலை 20ஆம் தேதி வரை, குடியேற்ற அனுமதி தேவைப்படும் (Emigration Clearance Required) 18 நாடுகளில் பணிபுரிவதற்காக ஒரு லட்சத்து 89ஆயிரத்து 206 இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்தியர்கள் வேலைக்காக புலம்பெயரும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியா முதல் இடத்தில் உள்ளது.

2022ஆம் ஆண்டில் ஜூலை 20ஆம் தேதி வரை, 99 ஆயிரத்து 452 இந்தியர்கள் வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2021ஆம் ஆண்டில் 32 ஆயிரத்து 845ஆகவும், 2020இல் 44 ஆயிரத்து 316 ஆகவும் இருந்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2022 ஜூலை வரையுள்ள மூன்று ஆண்டுகளில், குடியேற்ற அனுமதி தேவைப்படும் 18 நாடுகளில் பணிபுரிவதற்காக 4 லட்சத்து 16 ஆயிரத்து 24 இந்தியர்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அதில், கத்தாருக்கு 72ஆயிரத்து 114 இந்தியர்களும், குவைத்துக்கு 51ஆயிரத்து 896 இந்தியர்களும், ஓமன் நாட்டிற்கு 44 ஆயிரத்து 625 இந்தியர்களும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 43 ஆயிரத்து 970 இந்தியர்களும் புலம் பெயர்ந்துள்ளனர்.

இந்திய மாநிலங்களில் நடப்பாண்டில் வேலை தேடி இந்த 18 நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்திலிருந்து 67 ஆயிரத்து 240 பேரும், பிகாரில் இருந்து 31 ஆயிரத்து 81 பேரும், ராஜஸ்தானில் இருந்து 13 ஆயிரத்து 733 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 10 ஆயிரத்து 709 பேரும் புலம்பெயர்ந்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி - நிதித்துறை இணையமைச்சர் தகவல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.