நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக குஜராத் திகழ்கிறது. மத்திய அரசின் பல்வேறு விருதுகளை அம்மாநில அரசு பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியதாக விளம்பரப்படுத்தப்பட்டார். இதன் காரணமாக, இரண்டு முறை மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு குறித்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் தினமும் 18 பச்சிளம் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
பிறந்த ஒரு சில மணி நேரத்திலேயே குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவ்பூமி துவாரகா, போடாட், ஆனந்த், அரவல்லி, மஹிடசாகர் ஆகிய மாநிலங்களில் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குழந்தைகூட உயிரிழக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், 69 ஆயிரத்து 314 குழந்தைகள் அரசு மருத்துவமனையிலிருந்து சிக் நியூபார்ன் கேர் யூனிட்டில் மாற்றப்பட்டுள்ளது.
அதில், 38 ஆயிரத்து 561 குழந்தைகள் தனியார் மருத்துவமனையிலிருந்து சேர்க்கப்பட்டார்கள். பஞ்சமகால் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட மொத்த குழுந்தைகளில் 79 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனையிலிருந்து மாற்றப்பட்டவர்கள்" என்றார்.