பாட்னா: பிகாரில் நிதிஷ்குமார் அரசை கவிழ்க்கவும், எதிர்க்கட்சியில் சேரவும் ஆளும் ஜேடியுவின் 17 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) புதன்கிழமை கூறியது. இருப்பினும், ஜனதா தளம் இதனை கடுமையாக மறுத்தது.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவர் ஷியாம் ராஜக், "பிகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தாலும், பாஜக கூட்டணியில் ஆதிக்கம் செலுத்துவதால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் 17 பேர் விரைவில் கட்சி மாற தயாராக உள்ளனர். இவர்கள் ஆர்ஜேடியுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் 28 எம்எல்ஏக்கள் கொண்ட குழுவாக வருகின்றபோதுதான் வரவேற்போம். கட்சி மாற தயாராக இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை விரைவில் 17லிருந்து 28ஆக உயரும்” என்றார்.
ஆனால், இதுகுறித்து ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், ஆர்ஜேடி கூறுவது போன்று எதுவும் நிகழவில்லை என்று மறுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி - மத்திய வேளாண்துறை அமைச்சர்