ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியில் 15 வயது சிறுவன் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய், தந்தையை கோடாரியில் வெட்டிக்கொலை செய்துள்ளார். அத்துடன் உடன்பிறந்த தம்பியும் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்த தப்பியுள்ளார்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்த சிறுவன் மதுபழக்கத்திற்கு அடிமையானதால், பெற்றோர் அவனை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்துள்ளனர். மூன்று நாள்களுக்கு முன்பு திரும்பி வந்துள்ளார். அதன்பிறகும், மது அருந்தியதால், மீண்டும் மையத்திற்கு அனுமப்ப திட்டமிட்டுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சிறுவன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். படுகாயங்களுடன் அவனுடைய தம்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறான். சிறுவனை தேடும் பணி நடைபெற்றுவருகிறது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 6 மாத குழந்தை நரபலி? - தஞ்சையில் திடுக்கிடும் சம்பவம்