மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ரவேர் பகுதியிலிருந்து தூலேவுக்கு 21 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தோர் சிகிச்சைக்காக அருகேவுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ரவேரின் அப்போடா, கேஹேலா கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டில் மூன்றில் ஒருவரிடம் போலி லைசென்ஸ்: ஆதங்கத்தில் போட்டுடைத்த கட்கரி