ETV Bharat / bharat

சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து 15 சிறார்கள் தப்பியோட்டம் - ராஜஸ்தானில் பரபரப்பு - ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து 15 சிறார்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

juveniles escape
சிறுவர்கள்
author img

By

Published : Jun 29, 2023, 12:07 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து நேற்று (ஜூன் 28) அதிகாலையில் சுமார் 15 சிறார்கள் தப்பியோடி உள்ளனர். இதற்காக சிறுவர்கள் கழிவறையில் இருந்த வென்டிலேட்டரை உடைத்துவிட்டு, அதன் வழியாக தப்பியதாகத் தெரிகிறது.

இது குறித்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பாளர் மனோஜ் கெலாட் கூறும்போது, "நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. 15 சிறுவர்கள் கழிவறையின் மேல் சுவரில் இருந்த வென்டிலேட்டரை உடைத்துவிட்டு, அதன் மூலம் தப்பியுள்ளனர்.

தப்பியோடிய சிறுவர்களில் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. அவர் நேற்று விடுதலை செய்யப்பட இருந்தார். அவரது வழக்கறிஞர் ஜாமீன் பெற்றதற்கான ஆவணங்களுடன் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு வந்தபோதுதான், சிறுவன் மற்ற சிறார்களுடன் தப்பிச் சென்றது தெரிய வந்தது" என கூறினார்.

சிறுவர்கள் தப்பியோடியது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பின்னர், சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பாளர் மனோஜ் கெலாட் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தப்பிச் சென்ற சிறுவர்களை நான்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தப்பிச் சென்ற சிறுவர்கள் திருட்டு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த 15 சிறுவர்களில் ஒருவர், கடந்த 2ஆம் தேதி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.

அதன் பிறகு போலீசார் அவரை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். அதேபோல், தப்பியோடிய சிறார்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்த்திருத்தப் பள்ளியில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சிறார்கள் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்ற ஒரு சம்பவம் அண்மையில் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலூரில் உள்ள அரசினர் சிறார் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 சிறார்கள் தப்பியோடிவிட்டனர். இவர்கள் கழிவறையின் ஜன்னலை உடைத்து, போர்வையை கயிறாகப் பயன்படுத்தி தப்பியோடினர். இந்த சிறார்கள் மூன்றாவது முறையாக சிறார் பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வேலூர் சிறார் பாதுகாப்பு இல்லத்திலிருந்து 7 பேர் தப்பியோட்டம் - 3வது முறையாக தப்பியோடிய சிறார்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.