புதுச்சேரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், புதுச்சேரியில் நாளை நடக்கவுள்ள தேர்தல் தொடர்பான தேர்தல் கமிஷன் குறித்த வழிகாட்டு நடைமுறைகளின் படி தேர்தல் நடக்கும் பகுதிக்கு பகுதி, தொகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு சில பகுதிகளில் சில தொகுதிகளுக்கும் பொருந்தும்.
கடந்த மாதம் 22ஆம் தேதி புதுச்சேரி ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி வரும் 7ஆம் தேதி காலை 7 மணி வரை கூட்டம் கூட்ட, முழக்கங்கள் எழுப்ப, ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தவிர்த்து தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் இதுபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. உரிய காரணம் எதுவும் கூறாமல் மாநிலம் முழுவதும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் 144 தடை உத்தரவு தொடர்பாக விளக்கம் தர மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க்கிற்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் இன்று அளித்துள்ள விளக்கத்தில், 'சட்டத்துக்குப் புறம்பாக கூட்டமாக ஒன்றுகூடி செல்லவேத் தடை விதித்துள்ளோம்.
பொதுமக்களுக்கு எவ்வித தடையும் இல்லை. அவர்கள் வணிகம் செய்யவும், வேலைக்குச் செல்லவும், குடும்ப விழாக்கள் நடத்த எந்தவித தடையும் இல்லை. வாக்களிக்க செல்லவும், ஜனநாயக திருவிழாவை சரியான மனப்பான்மையுடன் கொண்டாட நண்பர்களும் குடும்பத்தினருக்கும் ஒன்று கூடுவதைத் தடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமூக நீதி தோழமை என்ற புகழை பெற்றார் காஷ்மீரைச் சேர்ந்த முதல் பெண்மணி சனா