மும்பை: மகாராஷ்டிராவில் நான்கு மாடி கட்டிடத்தில் ஜன்னலில் தொங்கி கொண்டிருந்த 14 வயது சிறுமியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை புனே சுக்ராவர் பேதே பகுதியில் உள்ள கணேஷ் குடியிருப்பில் நடந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், ஜன்னலில் சிக்கிக்கொண்டிருந்த சிறுமியை அப்பகுதி வாசிகளே மீட்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
மாடிக்கு சென்று சிறுமியை நோக்கிய கயிறுகளை வீசியும், ஏணி வைத்து சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
தீயணைப்புத் துறையினர் அங்கு வரும் போது, மக்கள் மாடியிலிருந்து வீசிய புடவையைப் பிடித்துக்கொண்டு சிறுமி நான்காம் மாடியில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கீழே வலையை விரித்த தீயணைப்புத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். அங்கிருந்த மக்கள், தீயணைத்து துறை வீரர்களுக்கு கைதட்டிப் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மண் சரிவு - உயிருக்குப் போராடிய தொழிலாளி பத்திரமாக மீட்பு