ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று(டிச.17) 14 வயது சிறுவன் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து தப்பி ஒடியுள்ளான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், "சம்பவத்தின்போது, சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியிடம் அத்துமீறியுள்ளான். அப்போது வீட்டில் யாருமில்லை. இதையடுத்து சிறுமி கூச்சலிடவே, சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி நலமாக உள்ளார். சிறுவனை தேடும் பணி நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தாய், தந்தையை கோடாரியால் வெட்டிக் கொன்ற 15 வயது மகன்