சாம்பல்பூர்(ஒடிஷா) : மாவட்ட நீதிமன்றத்தை சேதப்படுத்திய வழக்கில் 14 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது அச்சம்பவம் நேற்று( டிச.12) நள்ளிரவில் நடந்தேறியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் சிசிடிவி காட்சிகளின் ஆய்விற்குப் பின்னர் கைது செய்யப்படுவர் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சாம்பல்பூர் மாவட்ட எஸ்.பி கங்காதர் கூறுகையில், “நேற்று நடந்த விவகாரம் தொடர்பாக மூன்று வழக்குகள் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ளது. தற்போது வரை நீதிமன்றத்தை சேதப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம். அதில் ஒன்பது பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.
நாங்கள் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்போம். இந்த சட்டமீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது இன்னும் பல சிசிடிவி காட்சிகளின் ஆய்வுகளுக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று போராட்டம் நடைபெற்ற இடத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 200 அடிக்கு யார் உள்ளே நுழைந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். நேற்று(டிச.12) ஒடிஷா உயர் நீதிமன்றக் கிளையை சாம்பல்பூரில் நிறுவ வேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தில் மாவட்டம் நீதிமன்றம் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டது. அதையடுத்து அதில் ஈடுபட்ட 29 வழக்கறிஞர்களின் உரிமத்தை சாம்பல்பூர் மாவட்ட பார் கவுன்சில் 18 மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க: குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு