கடந்த நவம்பர் 24 ஆம் தேதி, அகர்தலா-டெல்லி சிறப்பு ராஜதானி எக்ஸ்பிரஸில் வந்த பயணி ஒருவர், ஹெல்ப்லைன் மையத்தை தொடர்பு கொண்டு, பயணி ஒருவர் தவறாக நடத்துகொள்வதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ரயிலின் அடுத்த நிறுத்தத்தில் ஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ரயில்வே அலுவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, வங்கதேசத்தை சேர்ந்த 14 நபர்கள், பொய்யான பெயர்களை உபயோகித்து ரயிலில் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள அகதி முகாமிலிருந்து அனைவரும் தப்பித்து இந்தியாவிற்குள் நுழைய முயன்றது தெரியவந்துள்ளது. 14 பேரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது, அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.