ஜல்பாய்குரி: மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள ஜல்பாய்குரி சர்தார் அரசு மருத்துவமனையில் கடும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக 130 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்டுள்ளனர்.
அதில் இரண்டு குழந்தைகள் உடல்நிலை மோசமானதால், அவர்கள் வடக்கு வங்கால மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தைகளின் சிகிச்சைக்காக வடக்கு வங்கம் மருத்துவக் கல்லூரியில் இருந்து ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு, ஜால்பாய்குரி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளது.
காரணம் தெரியவில்லை
மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குழந்தைகள் டெங்கு, சிக்கன் குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (Japanese encephalitis) என ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், குழந்தைகளின் ரத்த மாதிரிகளை கொல்கத்தாவிற்கு அனுப்பியுள்ளோம்.
முன்னதாக, அவர்களுக்கு எடுக்கப்பட்ட கரோனா தொற்று பரிசோதனையில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல்முறையாக சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து