காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஒரு வாரகாலத்தில் ஏழு பேர் வரை படுகொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடி வேட்டையாடும் பணி காவல்துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மண்டல காவல்துறை தலைவர் விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கரவாதிகள், ஒன்பது என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளில், மூன்று பேரை நாங்கள் சுட்டுக் கொன்றுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 12ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணிகள்