டெல்லியில் மங்கோல்பூரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இன்று (ஜூன்.20) அதிகாலை கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவ்விபத்தில் நல்வாய்ப்பாக, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. படுகாயமடைந்த 13 பேர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓட்டுநரை தரக்குறைவாகப் பேசிய அரசு ஊழியர்... மன்னிப்பு கேட்கும் வரை தர்ணா..