ETV Bharat / bharat

''இது ஒரு புரட்சி; சிலை மட்டும் அல்ல'' - அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்து கேசிஆர் பேச்சு

ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் உயரமான 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலையை, தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்(கே.சி.ஆர்) திறந்து வைத்தார்.

நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது!

author img

By

Published : Apr 14, 2023, 9:16 PM IST

ஹைதராபாத்: சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள், இன்று (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில், நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை, இன்று பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் அம்பேத்கர் சிலை மீது மலர்த் தூவப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

125 அடி உயரம் கொண்ட இந்த சிலை, 360 டன் இரும்பு எஃகு மற்றும் 114 டன் வெண்கலம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 146.50 கோடி ரூபாய் ஆகும். ஹைதராபாத்தில் உள்ள மாநில தலைமைச் செயலகத்திற்கு அடுத்ததாக, தெலங்கானா தியாகிகளின் நினைவகங்கள் உள்ள இடத்துக்கு அருகில் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டுள்ளது.

இதனைப் பார்க்கும்போது தினந்தோறும் ஒரு உந்துதலையும், முன்னேற்றத்தையும் இந்த சிலை, மக்களுக்கும், மாநில நிர்வாகத்திற்கும் கொடுக்கும் என கே.சி.ஆர் முன்னதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சியில், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பங்கேற்றார். சமுதாயத்தை மாற்றுவதற்கு மோதல் அவசியமான ஒன்று என பிரகாஷ் அம்பேத்கர் விழாவில் கூறினார். மேலும் பேசிய அவர், “அம்பேத்கரின் மிகப்பெரிய சிலையை நிறுவியதற்காக முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்க்கு எனது வாழ்த்துகள். அம்பேத்கரின் சித்தாந்தங்களை பின்பற்றுவதற்கு, இது ஒரு உண்மையான அர்ப்பணிப்பு.

சமுதாயத்தை மாற்றுவதற்கு அம்பேத்கரின் சிந்தனைகள் தேவைப்படுகிறது. மோதல், இதில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 1923ஆம் ஆண்டு, இந்திய ரூபாய் பிரச்னை குறித்து அம்பேத்கர் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார். பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி இந்தியாவை சுரண்டுகிறது என்பதை, அவர் (அம்பேத்கர்) உணர்ந்தார். ரூபாயின் மதிப்பை பலப்படுத்துவதன் தேவையையும் அம்பேத்கர் உணர்ந்தார்.

பொருளாதாரப் பாதிப்பை எதிர்த்து கே.சி.ஆர் போராடுகிறார். தலித் பந்து திட்டத்தை (Dalit Bandhu Scheme) உருவாக்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறேன். முதலமைச்சர் கே.சி.ஆர், அம்பேத்கரின் லட்சியங்களை முன்னேற்றிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். சிறிய மாநிலங்களின் திட்டங்களை அம்பேத்கர் ஆதரித்தார்.

ஒரு நாடு பாதுகாப்பு பிரச்னையில் இருக்கிறது என்றால், அதற்கு மற்றொரு தலைநகர் தேவைப்படுகிறது என அம்பேத்கர் கூறியுள்ளார். ஹைதராபாத், 2ஆவது தலைநகருக்கு பொருத்தமானதாக இருக்கும் என நான் கருதுகிறேன். பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வெகு தொலைவில் ஹைதராபாத் உள்ளது” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், ''இது ஒரு புரட்சி. ஒரு சிலை மட்டும் அல்ல. ஒவ்வொரு வருடமும் அம்பேத்கர் பெயரில் விருது வழங்க வேண்டும் என கதி பத்மராவ் பரிந்துரை செய்துள்ளார். இந்த விருதுக்காக 51 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படும். இதற்கு வருடந்தோறும் 3 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று, சிறந்த சேவை செய்பவர்களுக்கு மாநில அரசு விருது வழங்கும்.

தெலங்கானாவின் கனவினை உண்மையாக்கும் சின்னமாக இந்த சிலை உள்ளது. இந்த சிலையை உருவாக்க கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி. 2024 தேர்தலின் மூலம் அடுத்த அரசும் எங்களுடையது (பாரத் ராஷ்டிர சமிதி). ஒவ்வொரு வருடமும் 25 லட்சம் தலித் குடும்பங்களுக்கு, இந்த தலித் பந்து திட்டம் கொண்டு செல்லப்படும். பிஆர்எஸ் கட்சிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறப்பான வரவேற்பு உள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரிலும் வரவேற்பு உள்ளது. மகாராஷ்டிராவைப் போல், நாடு முழுவதும் பிஆர்எஸ் கட்சியை வரவேற்கும் நாள் வரும். இந்த வார்த்தை அனைவருக்கும் எளிதானது அல்ல” என்றார்.

இதையும் படிங்க: தமிழ் கலாசாரம் ஆதியும் அந்தமும் அற்ற நிலையாக விளங்குகிறது - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.