ETV Bharat / bharat

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்து 12 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 13, 2021, 7:20 PM IST

பெய்ஜிங்: சீனாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், எரிவாயு குழாய் வெடித்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்து 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹூபெய் பகுதியில் உள்ள ஷியான் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன். 13) காலை 6 மணியளவில் கட்டிடத்தின் எரிவாயு குழாய் திடீரென வெடித்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, தீயணைப்புத்துறை வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்தில் 138 பேர் படுகாயம் அடைந்தனர். சுமார் 150 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது. படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதையும் படிங்க: தந்தையை கொலை செய்த மகன் கைது: போலீஸ் தீவிர விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.