ETV Bharat / bharat

நேபாளத்தில் பேருந்து விபத்து : 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பலி! - indians die in Nepal bus accident

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Nepal Bus Accident
Nepal Bus Accident
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 12:57 PM IST

காத்மண்டு : நேபாளத்தின், நேபாள்கஞ்ச் அடுத்த பன்கே பகுதியில் இருந்து காத்மண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது. ரப்தி நதி நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்து பாலத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்துக் பேருந்தில் பயணித்த 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்த 12 பேரில் 8 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் இருவர் இந்தியர்கள் என தெரியவந்ததாக மீட்பு படையினர் தெரிவித்து உள்ளனர். பீகார் மாநிலம் மலாஹி பகுதியை சேர்ந்த யோகேந்திர ராம் (வயது 67) மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முனே (வயது 31) ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பேருந்தில் பயணித்த 22 பேர் பயங்கர உடல் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் லமாஹி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ள நிலையில், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : டெல்லி மதுபான ஊழல் வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4வது முறை சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.