ETV Bharat / bharat

Pondicherry: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எதிர்த்து 12 மணி நேரப் போராட்டம்! - ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை இடிப்பதை எதிர்த்து, அப்பகுதி வியாபாரிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து 12 மணிநேரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு எதிர்த்து 12 மணி நேர போராட்டம்!

author img

By

Published : Jul 31, 2023, 8:24 PM IST

Pondicherry: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எதிர்த்து 12 மணி நேரப் போராட்டம்!

புதுச்சேரி: "குபேர் அங்காடி" என அழைக்கப்படும் பெரிய மார்க்கெட் பகுதியில் காய்கறிக் கடைகள், பூக்கடைகள், மீன் கடைகள், மளிகை கடைகள், நடைபாதை கடைகள் என கிட்டத்தட்ட 1400 கடைகள் இயங்கி வருகின்றன. புதுச்சேரி பகுதியின் மிக பழைமையான இந்த மார்க்கெட் பகுதியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்துவிட்டு, 56 கோடி ரூபாய் செலவில் புதியதாக வணிக வளாகம் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதி வியாபாரிகளை, தங்கள் கடைகளை காலி செய்ய அரசு நோட்டீஸ் கொடுத்திருந்தது. 8 மாதங்களில் கட்டுமானப் பணி முடிந்து கடைகள் ஒப்படைக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கட்டுமானப் பணி முடியும் வரை தற்காலிகமாக கடலூர் சாலையில் உள்ள AFT திடலில் மார்க்கெட் இயங்கவும் அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தது.

மேலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் பெரிய மார்க்கெட்டில் நடக்கவிருக்கும் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. ஆனால், புதுச்சேரி பெரிய மார்க்கெட் நல்ல நிலையில் உள்ளது என்றும், அதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் இடித்துவிட்டு புதிதாக கட்டப்படுவதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், தற்போது உள்ள நிலையிலேயே மார்க்கெட் பகுதியை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரிய மார்க்கெட்டை இடித்து, புதிதாக அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று கருப்புக்கொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு துவங்கிய இப்போராட்டம் மாலை 6 மணி வரை, கிட்டத்தட்ட 12 மணி நேரம் நடைபெற்றது.

இதனால் வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரவேண்டிய காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களின் வரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்தின் காரணமாக புதுச்சேரி முழுவதும் உள்ள சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனிடையே இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மார்க்கெட் இடித்து கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மார்கெட் பகுதி அருகே உள்ள நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, மேலும் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ‘இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா’ - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.