ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: 20 கோடியைத் தாண்டிய பரிசோதனை, 52 லட்சம் பேருக்கு தடுப்பூசி! - இந்தியாவில் கரோனா நிலவரம்

இந்தியாவில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியது. மேலும் இதுவரை 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

COVID-19
COVID-19
author img

By

Published : Feb 6, 2021, 2:17 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் (பிப். 6) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 713 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 95 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே எட்டு லட்சத்து 14 ஆயிரத்து 304 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 590 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 918 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை, தடுப்பூசி நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (பிப். 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 40 ஆயிரத்து 794 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 20 கோடியே ஆறு லட்சத்து 72 ஆயிரத்து 589 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்கள் கதையைச் சொல்லுங்கள், 10 ரூபாயைப் பெறுங்கள்! புனே மக்களின் கவனத்தை ஈர்க்கும் இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.