கர்நாடகா: சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் ஈஷா அறக்கட்டளை வளாகத்தில் ஆதியோகி சிலை கட்டப்பட்டுள்ளது. இந்திய கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிக மரபுகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் மகள் ராதே ஜக்கியின் பரதநாட்டியம், கேரளாவின் தீ நாட்டியம், தெய்யம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாண்டுரங்கன் கோயிலில் மாட்டுப்பொங்கல் "கோ பூஜை": ஏராளமான தம்பதிகள் பங்கேற்பு!