நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆம் அலை குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்டு, ஒரு மாதம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் 426 மாணவர்கள், 49 பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் பல மாணவர்களுக்கு உருமாற்றம் பெற்ற, ஏஒய்.4.2 கரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
107 மாணவர்களுக்கு கரோனா
இதையடுத்து, மகாராஷ்டிராவிலும், பெங்களூருவிலும் இந்த வைரஸ் பரவிய நிலையில், நேற்று(டிச.5) கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் 107 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு ஏஒய்.4.2 தொற்று இருப்பதாக தகவல்கள் பரவிவருகின்றன.
இப்படிபட்ட சூழலில், தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகளிடையே ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவிவருவதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறார்களுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மீண்டும் மூடல்?
இதனை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பில் மாநில அரசுகள் மறுபரிசீலனையில் ஈடுபடலாம் என்று கூறப்படுகின்றன. இதனிடையே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அரசு அறிவிக்கும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரித்துள்ளார். பள்ளிகள் மூடல் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம்.
இதையும் படிங்க: ஒமைக்ரான் பதற்றம் அடையக் கூடிய உருமாற்றம் அடையவில்லை - ராதாகிருஷ்ணன்