ETV Bharat / bharat

100% இலக்கு: இரவிலும் தடுப்பூசி செலுத்தும் புதுச்சேரி சுகாதாரத் துறை

புதுச்சேரியில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திக்கொண்டே கிராமங்களை உருவாக்கும் வகையில் கிராமப் பகுதியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் இரவு நேரங்களில்கூட ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இரவிலும் தடுப்பூசி செலுத்தும் புதுச்சேரி சுகாதாரத் துறை

author img

By

Published : Jul 30, 2021, 6:00 PM IST

புதுச்சேரியில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, பின்னர் குறைந்து வந்தபோதிலும், 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தியதன்பேரில் சுகாதாரத் துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது.

அந்த வகையில் புதுச்சேரியில் அவ்வப்போது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

இருந்தபோதிலும் கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதனைக் களையும்பொருட்டு இரவு நேரங்களில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை புதுச்சேரியை அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் புதிய முயற்சியாக ஈடுபட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் கூலி வேலைக்குச் செல்வோர், நகரப் பகுதிகளுக்கு கொத்தனார் உள்ளிட்ட பணிகளுக்குச் செல்பவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை.

காலையில் செல்பவர்கள் இரவுதான் வீடு திரும்புகிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் விழுக்காடு குறைவாக உள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு சுகாதாரத் துறை ஊழியர்களின் இரவு நேர தடுப்பூசி செலுத்தும் பணி கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரவிலும் தடுப்பூசி செலுத்தும் புதுச்சேரி சுகாதாரத் துறை
இரவிலும் தடுப்பூசி செலுத்தும் புதுச்சேரி சுகாதாரத் துறை

இது குறித்து சுகாதார ஆய்வாளர் காசி முனியன் கூறுகையில், "கிராமப் பகுதிகளில் வேலைக்குச் செல்வோர் சுகாதாரத் துறையால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை என்பதை அறிந்து சுகாதார அலுவலர்களின் அறிவுறுத்தலின்பேரில் இந்த இரவு நேர தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இதன்மூலம் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலமாக புதுச்சேரி மாறும். இதன் காரணமாக மூன்றாம் அலையை நாம் எளிதில் எதிர்கொள்ள முடியும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.