நாசிக்: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து ஷீரடிக்கு தனியார் பேருந்து ஒன்றில் 50 பேர் சென்றுக்கொண்டிருந்தனர். நாசிக் அருகே அம்பர்நாத் தானே பகுதியில் சுங்கச்சாவடி பணிக்காக பத்தரே - பிம்பால்வாடி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் அம்பர்நாத் தானே பகுதியில் பேருந்து சென்ற போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த சரக்கு லாரி பேருந்து மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நாசிக் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.