டெல்லி: பழைய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு 96 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிம், . 'ஏசி' தீ தடுப்பு சிஸ்டம், நவீன ஆடியோ, வீடியோ சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த முடியாதது, எதிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் கூடிய செயலகமான சென்ட்ரல் விஸ்டா திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கரோனா பெருந்தொற்று நிகழ்விற்கு மத்தியிலும், கட்டுமான தொழிலாளர்களின் சீரிய மற்றுல் கடின உழைப்பால், 2.5 ஆண்டுகளுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட 1947-ம் ஆண்டு செங்கோல் நிறுவப்பட்டது.
பூஜைக்கு பின் புதிய நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 1947-ம் ஆண்டு செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. செங்கோல் நிறுவிய பின்னர் தமிழ்நாட்டு ஆதீனங்களிடம் தலைவணங்கி ஆசீர்வாதம் பெற்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி பக்திமயமாக காணப்பட்டார். அதன்பின் புதிய நாடாளுமன்றத்தில் கல்வெட்டுகளை திறந்து வைத்தார். பிரதமர் மோடி. அதோடு புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியாளர்களை சிறப்பித்தார் பிரதமர் மோடி. இதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் சர்வ மதத் தலைவர்கள் பிரார்த்தனை நடைபெற்றது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள 10 சிறப்பம்சங்கள்
1. டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
2. எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், உணவு சாப்பிடும் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.
3. 64,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
4. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் கியான் திவார், ஷக்தி திவார் மற்றும் கர்மா திவார் என்ற பெயரில், 3 முகப்பு வாசல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
5. முக்கிய நபர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு என தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளன்.
6. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
7. 800 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 300 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில், விசாலமாக, புதிய நாடாளுமன்றக் கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
8. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீராக நடைபெறும் பொருட்டு, கமிட்டி அறைகளில் ஆடியோ - வீடியோ வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
9. கூட்டு அவை நிகழ்வுகளின் போது, மக்களவை சபாநாயகர் அறையில், 1280 பேர் அமரும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
10. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவை பகுதி, தேசிய பறவையான மயில் போன்ற காட்சி அமைப்பிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை காட்சி அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: Central Vista: புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள சென்ட்ரல் விஸ்டாவில் ஒரு விசிட்!