சிலியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு அவருடைய சம்பளமான ரூ.43,000க்குப் பதிலாக ரூ. 1.42 கோடி ரூபாயை தவறுதலாக அந்நிறுவனம் அனுப்பியுள்ளது.
இந்த தவறை உணர்ந்த அந்நிறுவனம் பதிவேடுகளை சரிபார்த்து, அந்த ஊழியரின் மாதச் சம்பளத்தைவிட சுமார் 286 மடங்கு தவறுதலாக வழங்கப்பட்டதை உறுதி செய்தது. உடனே, அந்தப் பணியாளரிடம் கூடுதலாக செலுத்திய பணத்தை திரும்பக் கேட்டனர்.
அந்த ஊழியர் தனக்கு அதிகமாக செலுத்திய தொகையைத் திருப்பித்தருவதாகவும் அதற்காக வங்கிக்குச்சென்று எடுத்து தருவதாகவும் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
அவர் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் படுத்து தூங்கிவிட்டதாகக் கூறி தப்பித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு தற்போது தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த நபருக்கு தற்செயலாக மாற்றிய பணத்தை மீட்க அந்நிறுவனம் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க : ஸ்ரீரங்கத்தில் பல்லி விழுந்த பழச்சாற்றை அருந்தியவர் மருத்துவமனையில் சிகிச்சை - கடையில் ரெய்டுவிட்ட அலுவலர்கள்