ETV Bharat / snippets

Gpay-ல் லஞ்சம்.. மின்வாரிய செயற்பொறியாளர் பணியிடை மாற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 5:10 PM IST

செயற்பொறியாளர் ரவிசந்திரன்
செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: காட்பாடியில் செயல்பட்டு வரும் மின்வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் MRT (METRE, READING, TESTING) பிரிவில் செயற்பொறியாளராக (EE) ஆக பணிபுரிந்து வந்தவர் ரவிச்சந்திரன்.

இவர் பலரிடம் மின் இணைப்பிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு, லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 2) மின்வாரியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் HT ஒப்பந்ததாரரான ராணிப்பேட்டையைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரிடம் பனப்பாக்கத்தில் உள்ள கல் குவாரிக்கு 700 KVA புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு தொலைபேசியில் GPAY மூலம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்கும் தொலைபேசி உரையாடல் வைரலான நிலையில், இன்று அவர் திருப்பத்தூர் மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.