ETV Bharat / state

டிட்டோஜாக் போராட்டத்தை புறக்கணிக்கும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு! - TETOJAC Protest - TETOJAC PROTEST

TN Graduate Teachers Federation Boycott TETOJAC Protest: 31 கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு நடத்த உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என அதன் பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 3:21 PM IST

சென்னை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) 31 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செப்.10) நடத்த உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்று அதன் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "டிட்டோஜாக் அமைப்பின் சார்பில் 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் நாளை (செப்.10) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் டிட்டோஜாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. கடந்தாண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும், டிட்டோஜாக் அமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் 12 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனாலும், திட்டமிட்டபடி டிட்டோஜாக் அமைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால் இதற்கிடையே, பழைய ஓய்வூதிய திட்டம், பணிக்கொடை, நிறுத்தப்பட்டுள்ள ஊதிய பலன்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு இவற்றை பின்னுக்குத் தள்ளி, பட்டதாரி ஆசிரியர்களின் 19 ஆண்டுக்கால கோரிக்கையால் பெற்ற அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்னிறுத்தி போராடும் எந்த போராட்டத்திலும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ள மாட்டோம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நாளை (செப்.10) 31 கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் அமைப்பு நடத்த உள்ள போராட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது. மேலும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளையும் திறந்து மாணவர்களுக்கான கற்றல் மற்றும் கற்பித்தல் பணி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம்: விசாரணை அறிக்கை நாளை ஒப்படைக்க திட்டம் - அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.