வேலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று துவக்கி வைத்தார். இது தொடர்பாக கோ ஆப் டெக்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "பட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், அரசு கைத்தறி ரகங்களான கைத்தறி பட்டு ஆடைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும் கொடுத்துள்ளது. மேலும், ஏப்ரான் ரக துணிகளில் கையுறைகள், ஸ்கிரீன் துணிகள் என பல்வேறு துணிகள் விற்பனைக்கு உள்ளது.
இந்த தீபாவளி திட்டத்தின் மூலம் 56 சதவீதம் கூடுதல் பலன் உள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தீபாவளி விற்பனைக்காக இரண்டு கோடியே எழுபது லட்சம் ரூபாயை இலக்காக கொண்டிருப்பதாக கோ ஆப் டெக்ஸ் நிறுவன தெரிவித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு ரூ.1.82 கோடிக்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டது" என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.