திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - மதுரை நான்கு வழிச்சாலையிலுள்ள புதுக்கோட்டை முடக்குச்சாலை என்னும் இடத்தில் நத்தத்தில் இருந்து அழகர்கோயிலுக்கு, தனியார் பள்ளிப் பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் தவறான பாதையில் பயணித்த இருசக்கர வாகனம், பள்ளி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்திவ் வந்த மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 40), அவரதுமனைவி பஞ்சு (35), அவர்களின் ஆறு வயது மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நத்தம் போலீசார், மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.