சென்னை: கோயம்பேட்டைச் சேர்ந்த 32 வயது பெண், அருகில் உள்ள கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்திவரும் இருவர், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து ஆபாச வார்த்தைகளால் பேசி தகாத முறையில் நடக்க முயன்றுள்ளனர்.
இதனையடுத்து, அந்தப் பெண் சத்தம் போட்டதையடுத்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்ததும், அந்தப் பெண்ணை மிரட்டிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர். பின்னர், இதுகுறித்து அப்பெண் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 45 மற்றும் 52 வயது நபர்களை அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 45 வயது நபர் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.