ETV Bharat / snippets

குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 5:23 PM IST

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தென்காசி மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

அந்த வகையில், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் இன்று காலை முதலே காட்டாற்று வெள்ளம் அதிகரித்த வண்ணமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றாலத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.