ETV Bharat / snippets

மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு!

மஞ்சளாறு அணை மற்றும் சோத்துப்பாறை அணை
மஞ்சளாறு அணை மற்றும் சோத்துப்பாறை அணை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 2:47 PM IST

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி கடந்த சில நாட்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு மஞ்சளாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள 1873 ஏக்கர் நிலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 3386 ஏக்கர் நிலங்கள் என மொத்தமாக 5259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசனத்திற்காக நாளை (அக்.17) முதல் 150 நாட்களுக்கு 100 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளிலிருந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, G.கல்லுப்பட்டி, தும்ளப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5259 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. அந்தவகையில், நாளை முதல் 150 நாட்களுக்கு 60 கன அடி நீர் திறக்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.