ETV Bharat / snippets

அரசுப் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்ட தவெக கொடி.. சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 8:35 PM IST

சேலம் தவெக கொடி
சேலம் தவெக கொடி (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று விஜய் அறிமுகம் செய்தார். அத்ந வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பெருமாள் தலைமையில், காடையாம்பட்டி அரசு துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றிற்குள் கட்சிக் கொடியுடன் உள்ளே புகுந்து, கொடியை போர்டு போல் பிடித்துக் கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

மேலும், அங்கன்வாடி மையத்திற்குள்ளும் சென்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, தொகுதி முழுக்க கொடியைக் காட்டி மக்களுக்கு அறிமுகம் செய்தபடி, கட்சி நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்வாறு அரசியல் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து, அரசுப் பள்ளியில் கொண்டாடிய சம்பவம் குறித்து சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.