ETV Bharat / snippets

கொலைக்கு பழி தீர்க்க பேஸ்புக் பதிவு; ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது!

கைதான நடராஜன் மற்றும் கோப்புப்படம்
கைதான நடராஜன் மற்றும் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 7:25 PM IST

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அதிமுக பிரமுகருமான பார்த்திபன் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்ய முயன்ற பிரபல ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் மாதம் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இச்சம்பவம் நடந்து ஓராண்டான நிலையில், பார்த்திபனின் அண்ணனான நடராஜன், “தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில் என் தம்பி நடத்தி காட்டுவான். துரோகிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்” என முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பின்னர், இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாடியநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நடராஜனை (58) கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.