நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் சேவை, 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் - குன்னுார் வரை அமைக்கப்பட்டது. பின்னர் 1908ஆம் ஆண்டு உதகை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்த மலை ரயில் வழி செல்லும் போது அழகிய இயற்கை காட்சிகளுக்கு காணமுடியும் என்பதால் இந்த ரயில் பயணத்திற்கென தனி சிற்றுலா பயணிகள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு பாரம்பரிய சிறப்பின் அடிப்படையில் 'அம்ருத் பாரத்' ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் இந்த மலை ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மறு சீரமைக்கும் இறுதி கட்ட மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் உதகை மலை ரயில் நிலையம் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.