ETV Bharat / snippets

கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.. உறவினர்கள் சாலை மறியல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 3:11 PM IST

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்கள்
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி சப்பந்தோடு குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு உலா வந்த காட்டு யானைகள் அங்குள்ள மரங்களை முறித்து அட்டகாசம் செய்துள்ளது. தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் குஞ்சு மொய்தீன் (59) என்பவர் வீட்டின் அருகில் வந்துள்ளது.

இதனை பார்த்த மொய்தீன் யானைகளை விரட்ட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மொய்தீன் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால் முகம்மதுவின் உறவினர்கள் அவருடைய உடலை எடுக்க விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உறவினர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.