ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுற்றித்திரிவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்தியமங்கலம் போலீசார் வனப்பகுதியை ஒட்டியுள்ள புளியங்கொம்பை கம்பத்துராயன் புதூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் கம்பத்து ராயன் புதூரைச் சேர்ந்த திருமன் (60), செந்தில்குமார் (48) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களது வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர்கள்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!