ETV Bharat / snippets

இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்து.. வேலூரில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 5:50 PM IST

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் (EPhoto Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: குடியாத்தத்தில் இஸ்லாமியர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நகைக்கடை உரிமையாளரை கைது செய்யக் கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மௌசன்பேட்டை பகுதியில் கார்த்திக் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவு வைரலானதையடுத்து, மௌசன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், கார்த்தி நகைக்கடை முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புகாரை பெற்றுக் கொண்டு கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.